ரொமான்டிக் மூடில் பிரதீப் ரங்கநாதன் "ட்ராகன்" படத்தில் இருந்து வழித்துணையே சிங்கிள் பாடல் வெளியானது!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், உருவாகி உள்ள டிராகன் திரைப்படத்தில் இருந்து வழி துணையே என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து முடித்துள்ள திரைப்படம் டிராகன். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் இப்பாடலின் ப்ரோமோ வெளியான நிலையில்... தற்போது 'வழி துணையை' பாடலின் முதல் சிங்கிள் பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயடு லோகர் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் கேஓ சேஷா எழுதியுள்ள இந்த பாடலுக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.