அண்ணாமலையை திடீரென சந்தித்த இயக்குனர் பேரரசு மற்றும் தீனா... விஜய் பற்றி நடந்த பேச்சு - முழு வீடியோ இதோ

இயக்குனர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவருடன் கலந்துரையாடினர்.

Share this Video

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இசையமைப்பாளர் தீனாவும், இயக்குனர் பேரரசுவும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்கள் குறித்து அவர்களுடன் ஜாலியாக உரையாடினார் அண்ணாமலை. அதுமட்டுமின்றி பேரரசு ஊர் பெயர்களை வைத்து படம் இயக்குவது பற்றி ஆச்சர்யத்துடன் கேட்டு தெரிந்துகொண்டார்.

குறிப்பாக திருப்பாச்சி படத்தில் இடம்பெறும் பட்டாசு பாலு கேரக்டரை நினைவுகூர்ந்த அண்ணாமலை, அது வேறலெவலில் இருந்ததாக பாராட்டினார். இந்த சந்திப்பின் போது பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இயக்குனர் பேரரசுவும், இசையமைப்பாளர் தீனாவும் அண்ணாமலையை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Video