லோகேஷின் யூனிவெர்ஸ்; மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஒரு புதிய ஹீரோ - மரண மாஸ் வீடியோ இதோ!

Lokesh Cinematic Universe : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இணையும் புதிய ஹீரோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

First Published Oct 29, 2024, 11:57 PM IST | Last Updated Oct 29, 2024, 11:57 PM IST

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக பயணித்து வருகிறார். மாநகரம் திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படத்திலிருந்து தனது சினிமாடிக்கெட் யுனிவர்ஸ் என்கின்ற ஒரு புது விஷயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகம், செய்து அதில் மிகச் சிறந்த முறையில் வெற்றியும் கண்டு வருகிறார். 

ஏற்கனவே "கைதி", "லியோ" மற்றும் "விக்ரம்" என்று மூன்று திரைப்படங்களை ஒன்றாக இணைத்து தன்னுடைய சினிமாடிக்கெட் யுனிவர்சை தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள ஒரு விஷயமாக அவர் மாற்றி இருக்கிறார். இந்த சூழலில் தன்னுடைய சினிமாடிக்கெட் யுனிவர்சுக்குள் களமிறங்கும் புதிய ஹீரோ குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறார் அவர். 

அக்டோபர் 29ஆம் தேதி தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் "பென்ஸ்". ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய சினிமாட்டிக் யூனிவெர்சில் இந்த "பென்ஸ்" திரைப்படம் வருவதாகவும். "மாஸ்டர் உங்களை அன்போடு எனது உலகிற்கு வரவேற்கிறேன்" என்று கூறி ஒரு அசத்தலான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் லோகேஷ். 

Video Top Stories