திருச்செந்தூர் முருகன் கோவிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்பு பிரார்த்தனை.

Share this Video

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் நடிகை, நடிகர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

இந்நிலையில் இன்று காலை திரைப்பட இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் சாமி தரிசனம் செய்தார். அவர் மூலவர் சன்னதி பெருமாள் சன்னதி, சண்முகர் சன்னதி மற்றும் சூரசம்ஹாரம் மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் நிகழ்வில் சாமி தரிசனம் செய்த பிறகு அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Video