மாமியார் கூட பழகி பார்க்க ட்ரிப்! இவனாவின் ஒர்க் அவுட் ஆகாத ஐடியா.. தோனி தயாரிப்பில் வெளியானது 'LGM' ட்ரைலர்

கிரிக்கெட் வீரர் தோனி மனைவி சாக்ஷி தயாரிப்பில் உருவாகியுள்ள 'LGM' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

First Published Jul 10, 2023, 11:53 PM IST | Last Updated Jul 10, 2023, 11:53 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் "தோனி என்டர்டைன்மென்ட்" நிறுவனம் தயாரிக்கும், முதல் தமிழ் திரைப்படம் 'LGM' ( Lets Get Married). காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தற்போதைய இளம் ஜோடிகள் மனநிலையை வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் கதை கரு, தோனியின் மனைவி சாக்ஷி உடையது. அதனை திரைக்கதையாக மாற்றி, எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. இந்த படத்தில்... அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த இவனா கதாநாயகியாக நடித்துள்ளார். நதியா ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

இவானாவை காதலிக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு வில்லனாக வந்து நிற்கிறது இவனாவின் எதிர்பார்ப்பு. திருமணத்துக்கு பின்பு, என்னுடைய அம்மா என்னுடன் தான் இருப்பாங்க என தன்னுடைய முடிவில் ஹரிஷ் தீர்க்கமாக உள்ளதால், இவனா மாமியாருடன் பழகி பார்க்க வேண்டும் என்பதற்காக, இரண்டு குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன்  கூர்க் ட்ரிப் போக முடிவு செய்கிறார்கள். இந்த ட்ரிப்பின் போது காட்டுக்குள் இவனா மற்றும் நதியா மாட்டிக்கொள்ள... என்ன நடக்கிறது? அடுத்து என்பதை சுவாரஸ்யமான கதைக்களத்துடன் கூறியுள்ளார் இயக்குனர்.

இப்படத்தின் ட்ரைலர் இதோ...

Video Top Stories