Asianet News TamilAsianet News Tamil

'கேப்டன் மில்லரில்' வேற லெவல் சம்பவம் செய்துள்ள தனுஷ்! வெளியானது டீசர் - வீடியோ!

நடிகர் தனுஷ் நடித்துள்ள, கேப்டன் மில்லர் படத்தின் டீசர், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் வெளியானது.
 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பீரியாடிக் கதையம்சம் கொண்ட இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநா ஜூலை 28-ஆம் தேதி கொண்டாட பட உள்ள நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நள்ளிரவு 12:01 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சற்று முன்னர் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. டீசரை பார்க்கும் போத இந்த் படத்தில் தனுஷ் வேற லெவலுக்கு நடித்திருப்பார் என்பது தெரிகிறது. 
 

Video Top Stories