என்னடா நடக்குது... அனுஷ்காவின் கம்பேக் படத்திற்காக தனுஷ் பாடிய சர்ப்ரைஸ் பாடல் இதோ

அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படத்திற்காக நடிகர் தனுஷ் பாடியுள்ள பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Jun 1, 2023, 11:31 AM IST | Last Updated Jun 1, 2023, 11:41 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தில் நடித்து முடித்த பின்னர் நடிகர் அனுஷ்காவுக்கு உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது அவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படம் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார்.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படத்தில் நடிகர் நவீன் போலிஷெட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன

அந்த வகையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படத்தின் பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. என்னடா நடக்குது என தொடங்கும் அப்பாடலை தமிழில் நடிகர் தனுஷ் பாடி உள்ளார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Video Top Stories