துள்ளல் இசை.. 2K கிட்ஸ்க்கு செம ட்ரீட் வைத்த தனுஷ் - வெளியானது NEEK படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

NEEK First Single : தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் NEEK படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் இப்பொது வெளியாகியுள்ளது.

First Published Aug 30, 2024, 6:33 PM IST | Last Updated Aug 30, 2024, 6:33 PM IST

இயக்குனராக ஏற்கனவே இரண்டு திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற தனுஷ் இயக்கத்தில், மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் தான் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படம். இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இளைஞர்கள் பலரும் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பிரபல நடிகை அனிகா மாற்றும் பிரபல நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கான இசையை அமைத்து வரும் நிலையில் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்திலிருந்து "கோல்டன் ஸ்பேரோ" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

பிரபல நடிகை பிரியங்கா மோகன் இந்த பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த பாடலின் மூலம் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்திரா, தமிழ் திரையுலகில் பாடல் ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கவுள்ளார் என்ற சில தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த பாடலை அறிவு எழுதியுள்ளது இப்பொது தெளிவாகியுள்ளதால், யாத்ரா குறித்து பரவிய விஷயங்கள் போலி என்றும் தெரியவந்துள்ளது.

Video Top Stories