
லவ்வுக்கும் - லவ் ஃபெயிலியருக்கும் நடுவுல சிக்கும் ஹீரோ? 'NEEK' படத்தின் ஜாலியான ட்ரைலர் வெளியானது!
தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள, 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ராயன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் தன்னுடைய அக்கா மகனை வைத்து இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கதாநாயகன் காதல் மற்றும் காதல் தோல்வியின் உணர்ச்சிகளுக்கு நடுவே எப்படி போராடுகிறார் என்பது எதார்த்தமாக காமெடியோடு கூறியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.