Biggboss Promo: ஜிபி முத்துவை பார்த்தல் காண்டாகுது! மனுஷ அங்கையும் இதை ஆரம்பிச்சிட்டாரா கடுப்பான தனலட்சுமி!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக சென்றாலும், விரைவில் அடுத்தடுத்த பிரச்சனைகள், சண்டைகள் போன்றவை கண்டிப்பாக வரும். அதுவும் இந்த முறை இது போன்ற பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தற்போது வெளியாகி வரும் ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது.
சாம்பார் விஷயத்தில் மகேஸ்வரிக்கும் , தனலக்ஷ்மிக்கும் சண்டை வந்ததை போன புரோமோவில் பார்த்தோம். இதை வைத்து ஜிபி முத்து கிண்டல் செய்வது போல் சக போட்டியாளர்களிடம் ஜாலிக்காக பேசுகிறார். மேலும் அவரது ஆஸ்தான பாஷையை பேச கூறி மற்ற போட்டியாளர்கள் கூற அவரும் செத்த பயலே... நார பயலே என ஜாலியாக பேசுகிறார். இதையெல்லாம் கவனிக்கும் தனலட்சுமி ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டு ஆகுது. அவர் நாரதர் வேலை பார்த்து கொண்டு, அனைவரையுமே அந்த வேலையை பார்க்க வைக்கிறார் என கூறுகிறார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.