சூடு பிடிக்கும் பிக்பாஸ்.! மகேஸ்வரிக்கு ஆப்பு வைத்து அலற விட்ட தனலட்சுமி! வெளியான புரோமோ..

பிக்பாஸ் இன்றைய தினம் கொடுத்துள்ள டாஸ்க் கண்டிப்பாக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என தெரிகிறது. இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Oct 25, 2022, 4:34 PM IST | Last Updated Oct 25, 2022, 4:34 PM IST

நேற்று சந்தோஷமாக ஒன்று கூடி போட்டியாளர்கள் அனைவரும், தீபாவளியை கொண்டாடிய நிலையில்... இன்றைய தினம் ஒருவருக்கொருவர் வாக்குவாதம், மற்றும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இன்று பிக்பாஸ் கொடுத்த 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்கிற டாஸ்க்கிற்காக மணிகண்டன் மற்றும் ஜனனி ஆகியோர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... மகேஸ்வரி கையில் ஷிவின் பெயர் போட்ட பொம்மையும், தனலட்சுமி கையில், மகேஸ்வரியின் பெயர் போட்ட பொம்மையும் உள்ளது.

டால் ஹவுஸ் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக மகேஸ்வரி தனலக்ஷ்மியிடம் அவரின் பெயர் போட்ட பொம்மையை உள்ளே வைக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால், தனலட்சுமி உள்ளே வைக்க மறுக்கிறார். மேலும் இது வேண்டும் என்றே, பர்சனனாக செய்வது போல் தனக்கு தோன்றுவதாக மகேஸ்வரி கூற, தனலக்ஷ்மியும் ஆமாம் பர்சனலாகத்தான் செய்கிறேன் என கூறுகிறார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. எப்படியோ மகேஸ்வரி வெற்றி வாய்ப்பை தட்டி விட்டு அவரை அலற விட்டுள்ள புதிய புரோமோ இதோ...