இசையமைப்பாளராக ரசிகர்கள் மனதை வென்றாரா மிஷ்கின்? 'டெவில்' படத்தில் இருந்து வெளியான கலவி பாடல்!

ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்ட இயக்குனர் மிஷ்கின், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள 'டெவில்' படத்திலிருந்து, முதல் சிங்கிள் பாடலான கலவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனர் மிஷ்கின் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன், போன்ற பல படங்களை அடுத்தடுத்து இயக்கி, தன்னுடைய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார். 

இயக்குனர் என்பதை தாண்டி, சமீப காலமாக திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், முதல் முறையாக இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் ஆதித்யா இயக்கி உள்ள 'டெவில்' என்கிற படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள மிஷ்கின் இசையில், இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான கலவி என்கிற பாடல் வெளியாகி உள்ளது.

இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே, அருமையான மெலோடி பாடல் மூலம் இயக்குனர் மிஷ்கின் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்துள்ளதாக, ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, சுபஸ்ரீ, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video