"மக்கள் செல்வன் கெட்டப்பில் அகில உலக சூப்பர் ஸ்டார்".. காமெடி சரவெடியாக வரும் "சூது கவ்வும் 2" - டீசர் இதோ!

Soodhu Kavvum 2 Teaser : கடந்த 2013ம் ஆண்டு மக்கள் செல்வன் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், சி.வி. குமார் தயாரிப்பில் வெளியான படம் தான் சூது கவ்வும்.

First Published Mar 23, 2024, 2:24 PM IST | Last Updated Mar 23, 2024, 2:24 PM IST

கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் தான் சி.வி குமார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் "பீட்சா" மற்றும் "சூது கவ்வும்" உள்ளிட்ட திரைப்படங்களையும். "தெகிடி", "முண்டாசுப்பட்டி" மற்றும் "இன்று நேற்று நாளை" போன்ற ஜனரஞ்சகமான படங்களையும் தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்.

இந்நிலையில் இயக்குனர் எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில், தற்பொழுது "சூது கவ்வும்" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ். தியாகராஜா என்பவரோடு இணைந்து சி.வி. குமார் தயாரித்து வழங்குகிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். 

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது காமெடி காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Video Top Stories