தண்ணீருக்குள் படமாக்கப்பட்ட 'கஸ்டடி' படத்தின் காட்சிகள்! மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மிரளவைத்த படக்குழு!
நடிகர் நாக சைதன்யா தமிழில் முதல் முறையாக அறிமுகமாகும் 'கஸ்டடி' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் தண்ணீருக்கு அடியில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கஸ்டடி. இப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நாளை இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் தண்ணீருக்கு அடியில் படமாக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை பட குழு தற்போது வெளியிட்ட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.