வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

மாநாடு படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு, தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி. இந்த படத்தில் ஹீரோவாக, நாகசைதன்யா தமிழில் அறிமுகமாகினார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடிக்கடி படம் குறித்த அப்டேடுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பையே 'வெங்கட் பிரபு கைது' என வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு, ரிவீல் செய்த நிலையில், Head up High என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, கிருதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ஸ்ரீனிவாச சித்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video