கஸ்டடி படத்தில் இருந்து வெளியான கலகலப்பான 'அம்மணி ருக்மணி' லிரிக்கல் வீடியோ பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆன கஸ்டடி படத்தில் இருந்து அம்மணி ருக்மணி பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published May 18, 2023, 2:00 AM IST | Last Updated May 18, 2023, 2:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. சென்னை 28 , சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இவர், முதல் முறையாக தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கி கடந்த வாரம் வெளியான திரைப்படம் கஸ்டடி. 

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற... அம்மணி ருக்மணி என்கிற பாடலை, படக்குழு வெளியிட்டுள்ளது. 


 

Video Top Stories