பழனியில் தண்டாயுதபாணி கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்ட நடிகர் யோகிபாபு

பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நேற்று மாலை நகைச்சுவை நடிகர் யோகி பாபு வருகை தந்தார். பின்னர் ரோப் கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தார். பின்னர் தங்க தேரில் சுவாமி ரதத்தை இழுத்து வழிபாடு மேற்கொண்டார். 

தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் போகர் சித்தர் சமாதியில் வழிபட்டு பின்னர் ரோப் கார் வழியாக கீழே இறங்கி சென்றார். நடிகர் யோகி பாபுவை கண்ட பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Video