சிவ வாத்தியங்கள் முழங்க... நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் - கலங்கவைக்கும் வீடியோ இதோ

சிவ வாத்தியங்கள் முழங்க நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Share this Video

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மயில்சாமி தீவிர சிவ பக்தர் என்பதால், அவரது இறுதி ஊர்வலம் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்று வருகிறது. சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. மயில்சாமியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சாலை நெடுகிழும் மக்கள் திரண்டு நின்று அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Video