மாஸ் காட்ட ஒரு ஜெயிலர்.. கிளாசிக் ஸ்டைலுக்கு ஒரு லால் சலாம்.. ரெடியான விநாயகர் - மண்பாண்ட கலைஞர் அசத்தல்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெயிலர் பட முத்துவேல் பாண்டியன் விநாயகர் சிலை, மற்றும் லால் சலாம் பட மொகிதீன் பாய் விநாயகர் சிலை உள்ளிட்ட பொம்மைகளை வடிவமைத்து அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகரான மண்பாண்ட கலைஞர் ஒருவர்.

Share this Video

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் தான் ரஞ்சித். இவர் அதிதீவிரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகராக இருந்து வருகிறார். மேலும் மண்பாண்ட கலைஞரான இவர், ரஜினியின் ஒவ்வொரு படம் வெளிவரும் பொழுதும் அந்த தோற்றத்தை களிமண் சிற்பமாக வடிப்பது இவரது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ரஜினியின் உருவத்தை பல விதங்களில் களிமண் சிற்பமாக வடித்துள்ளார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர் ஜெயிலர் விநாயகர் மற்றும் , லால் சலாம் விநாயகரை வடிவமைத்துள்ளார்.

Related Video