ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ

வீர தீர சூரன் படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்த விக்ரம், ஆட்டோவில் வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

Ganesh A  | Updated: Mar 28, 2025, 6:01 PM IST

Chiyaan Vikram’s Auto Ride from Theatre Goes Viral! விக்ரமின் 62வது படமான வீர தீர சூரன் பாகம் 2 நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணாமாக காலை ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து பிரச்சனைகள் முடிக்கப்பட்டு படம் நேற்று மாலை தான் ரிலீஸ் ஆனது. அப்போது படம் பார்க்க சத்யம் தியேட்டர் வந்த விக்ரம், படம் முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் கிளம்பி சென்ற வீடியோ வைரலாகிறது.

வீர தீர சூரன் திரைப்படத்தை அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமுக்கு இது கம்பேக் படமாக அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

நேற்று இரவு சத்யம் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனும் வீர தீர சூரன் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தார். அப்போது சிவகார்த்திகேயனை வரவேற்று அழைத்து சென்றார் விக்ரம். படம் முடிந்ததும் தியேட்டரில் இருந்து வெளியே வந்த விக்ரமை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு கிளம்பி சென்றார் விக்ரம். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Read More...

Video Top Stories