Asianet News TamilAsianet News Tamil

இது ஒரு Kidnap Thriller.. சித்தா கண்டிப்பா ஹிட்டாகும்.. பழனி முருகனை தரிசிக்க சென்ற நடிகர் சித்தார்த் - வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சித்தார்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் தான் "சித்தா". இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகவிருக்கும் நிலையில் படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

First Published Sep 17, 2023, 5:20 PM IST | Last Updated Sep 17, 2023, 5:20 PM IST

இந்த நிலையிலே நடிகர் சித்தார்த் இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சித்தா திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம் ஒரு சித்தப்பா மற்றும் அவர் அண்ணன் மகள் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்ன தெரிவித்தார். இந்த படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பழனியில் மூன்று மதமாக படப்பிடிப்பு நடந்த நிலையில், சித்தா படம் வெற்றி பெற பழனி முருகனை படக்குழுவினருடன் இணைந்து தரிசிக்க செல்வதாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

Video Top Stories