அரசியல்வாதியாக கெத்து காட்டும் சிரஞ்சீவி... நயன்தாராவின் மிரட்டல் நடிப்பில் வெளியானது 'காட் ஃபாதர்' ட்ரைலர்.
நடிகர் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள நடித்துள்ள 'காட் ஃபாதர்' படத்தில் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'God Father'. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின், ட்ரைலர் சற்று முன் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளது.
அரசியல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படம், மலையாளத்தில்... பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருந்த லூசிஃபர் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குனர் மோகன் ராஜா கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'வேலைக்காரன்' படத்தை இயக்கியதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.