பீலா விட்ட வடிவேலு... மரண பயத்தை காட்டிய சந்திரமுகி - வைகைப்புயலின் டப்பிங் அலப்பறைகள்

சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் பணிகளின் போது நகைச்சுவை நடிகர் வடிவேலு செய்த காமெடி கலாட்டா நிறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Aug 16, 2023, 4:13 PM IST | Last Updated Aug 16, 2023, 4:13 PM IST

சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. ஆனால் இப்படத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பி.வாசு இயக்கியுள்ள இப்படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.

சந்திரமுகி 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சந்திரமுகி முதல் பாகத்தில் முக்கிய பங்காற்றிய நகைச்சுவை நடிகர் வடிவேலு இப்படத்திலும் காமெடியனாக நடித்திருக்கிறார். அவர் தனது முருகேசன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்த போது எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் சந்திரமுகி தனது பெஸ்ட் பிரெண்ட் என பீலா விடும் வடிவேலுவை சந்திரமுகி அலறவிடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

Video Top Stories