'சந்திரமுகி 2' படத்தில்.. ராகவா லாரன்ஸின் உச்சாகமான நடனத்துடன் வெளியான 'மோருணியே' செகண்ட் சிங்கிள் பாடல்!

சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ள 'மோருணியே' என்கிற இரண்டாவது சிங்கிள் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது 'சந்திரமுகி 2' திரைப்படம். இயக்குனர் பி வாசு இயக்கி உள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில், கங்கனாவின் ஸ்வாகதாஞ்சலி என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான 'மோருணியே' பாடல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸின் துள்ளலான நடன அசைவுகளுடன், மிகவும் கலர் ஃபுல்லாக இந்த பாடல் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Related Video