Rajini : "நண்பரே இதோ வரேன்".. நாளை பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு - மனைவியோடு விஜயவாடா பறந்த சூப்பர் ஸ்டார்!

Super Star Rajinikanth : சந்திரபாபு நாய்டுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தனது மனைவியுடன் விஜயவாடா சென்றுள்ளார் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

First Published Jun 11, 2024, 11:20 PM IST | Last Updated Jun 11, 2024, 11:20 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மோடியின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்நிலையில் நாளை புதன்கிழமை ஆந்திரவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு அவர்கள் பதவி ஏற்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இந்த சூழலில் நாளை நடக்க உள்ள அந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக தனது மனைவி லதாவுடன் தற்பொழுது விஜயவாடா சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார். விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரும் ஜூலை மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கூலி பட பணிகளை துவங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.