'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் பாடியுள்ள 'கில்லர் கில்லர்' பாடலின் லிரிகள் வீடியோ வெளியானது!

பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள, 'கேப்டன் மில்லர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'கில்லர் கில்லர்' லிரிகள் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Nov 22, 2023, 6:08 PM IST | Last Updated Nov 22, 2023, 6:08 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் ஷிவ ராஜ்குமார், விநாயகன், சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் இப்படத்தை படக்குழு வெளியிட முடிவு செய்த நிலையில், பின்னர் திடீர் என பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படம் குறித்த, அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது... இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கில்லர் கில்லர்' என்கிற பாடல் வெளியாகி உள்ளது. போராளியாக நடிகர் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில், அவருக்காகவே உணர்வுகள் பொங்கும் பாடலாக இது உள்ளது. ஜிவி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் கில்லர் கில்லர் பாடலை தனுஷ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Video Top Stories