Asianet News TamilAsianet News Tamil

Demon Trailer: நொடிக்கு நொடி திகிலூட்டும்... டீமன் படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குனர் ரமேஷ் பழனிவேல், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியுள்ள டீமன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Aug 16, 2023, 5:44 PM IST | Last Updated Aug 16, 2023, 5:44 PM IST

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள டீமன் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது. இந்த படத்தில் அறிமுக நாயகன் சச்சின் என்பவர் கதாநாயகனாக நடிக்க, அபர்னதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுருதி பெரியசாமி, ரவீனா தாகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரம்பஹேல் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை சோமசுந்தரம் என்பவர், விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். உண்மை சம்பவ மையமாக வைத்து உருவாக்கி உள்ள, இந்த திகில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Video Top Stories