குழந்தை பாசத்தால் நெஞ்சை தொட்ட கவின்... 'டாடா' படத்தில் இருந்து வெளியான தாயாக வீடியோ பாடல்!

பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியாகி, 3 வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'டாடா' திரைப்படத்தில் இடம்பெற்ற தாயாக வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Feb 23, 2023, 9:45 PM IST | Last Updated Feb 23, 2023, 9:45 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளி திரையில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்த 'லிப்ட்' திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்திருந்த 'டாடா' திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து ரசிகர்கள் நல்ல வரவேற்பை கிடைத்துவருவதால், தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ள கவினுக்கு, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் நடித்திருந்தார்.

தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருந்த எமோஷனல் பாடலான தாயாக நான் என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Video Top Stories