Asianet News TamilAsianet News Tamil

என்னை மாதிரி கெட்டவள் யாரும் கிடையாது..! வெளியே தெரிய தொடங்கிய ஜனனியின் மற்றொரு முகம்.! ப்ரோமோ!

தற்போது நடக்கும் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் இருந்து, ஜனனி வெளியேற்றப்பட்டதால், அவர் கோபமடைந்து சில ஆக்ரோஷமான வார்த்தைகளை விடும் ப்ரோமோ தன வெளியாகியுள்ளது.
 

First Published Oct 25, 2022, 12:51 PM IST | Last Updated Oct 25, 2022, 12:51 PM IST

நேற்று பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மிகவும் சிறப்பாக தீபாவளியை கொண்டாடிய நிலையில், இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் மூலம் மீண்டும் சிறப்பாக சில பிரச்சனைகளுக்கு அடி போட்டுள்ளார். நீயும் பொம்மை, நானும் பொம்மை என்னும் டாஸ்க் நடத்தப்படுகிறது. மொத்தம் 19 போட்டியாளர்களுக்கு நடக்கும் இந்த போட்டியில் 18 டால் ஹவுஸ் மட்டுமே இருக்கும், எந்த போட்டியாளர் பெயர் பொருத்தப்பட்ட பொம்மை கடைசியாக வைக்கப்படுகிறதோ அவர் அந்த போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே... மணிகண்டன் தன்னுடைய பெயரை எடுக்கவில்லை என சண்டை போடுகிறார். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில், ஜனனி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார். இதை தொடர்ந்து, மிகவும் எமோஷ்னலாக என்னிடம் நன்றாக பழகினால் நானும் அன்பாக பழகுவேன், என்னிடம் கோபத்தை காட்டினால் என்னை மாதிரி கெட்டவள் யாரும் இல்லை. என ஆக்ரோஷமாக கூறும், புரோமோ வெளியாகி உள்ளது.

Video Top Stories