Watch : திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜிபி முத்து... தலைவருக்கு என்னாச்சு?

பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படம் வெளியாகி வைரலாகிறது.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜிபி முத்து தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதை பார்த்து ரசிகர்கள் பதறிப்போயினர். அவர் தீடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மற்றபடி அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video