Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் வீட்டில் யார் ஸ்ட்ராங்? யார் வெளியேறுவார்? போட்டியாளர்களுக்குள் நடக்கும் பேச்சு! வெளியான புரோமோ!

பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 5 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ள நிலையில், இவர்களில் யார் வெளியேறுவார் என அவர்களுக்குள்ளேயே நடக்கும் பேச்சு வார்த்தை தான் இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது.
 

First Published Oct 31, 2022, 2:01 PM IST | Last Updated Oct 31, 2022, 2:00 PM IST

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டின் சிலுமிஷ மன்னன் அசல் கோளாறு வெளியேறிய நிலையில்... 8 போட்டியாளர்கள் இந்த வாரம் கதை சொல்லும் டாஸ்க்  மூலம் காப்பாற்ற பட்டதால், 5 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரம், நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். அந்த 5 போட்டியாளர்களும், மிகவும் வலிமையான போட்டியாளர்கள் என்பதால்... யார் வெளியேறுவார் என ஹவுஸ் மேட்ஸ் பேசி கொள்வது தான் தற்போது புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

அமுத வாணன், ஜனனி, ராபர்ட் மாஸ்டர் மற்றும் தனலட்சுமி ஆகியோர் அமர்ந்து, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடப்பிடித்துள்ள 5 போட்டியாளர்களும் மிகவும் வலிமையான போட்டியாளர்கள் இவர்களில் யாரை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என பேசி கொண்டுள்ளனர். அப்போது அமுதவாணன் கதிர் தான் மிகவும் வலிமையான போட்டியாளர் என கூறுகிறார். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ... 

Video Top Stories