அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கிய நிலையில் முதல் நாளான இன்று எவிக்சன் பணிகள் துவங்கியுள்ளது. பரபரப்பாக அது குறித்த வீடியோக்களும் வெளியாகி வருகிறது. 

First Published Oct 7, 2024, 6:58 PM IST | Last Updated Oct 7, 2024, 6:58 PM IST

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில், 24 மணி நேரமும் நேரலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தினமும் இரவு 9:30 மணிக்கு தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டாலும், ரசிகர்கள் பிக் பாஸ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக, நேரலையை கண்டு அதன் மூலம் பல அப்டேட்டுகளை தெரிந்துகொள்கின்றனர். 

நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில், முதல் நாளிலேயே ஆண்கள் & பெண்கள் என்று தனித்தனியாக வீடு பிரிக்கப்பட்டு சிறப்பான முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் எவிக்சன் ப்ராசஸ் நடந்து வரும் நிலையில், நடிகை அன்ஷிதாவை, நடிகர் அர்னவ் நாமினெட் செய்தார். 

அதற்கான காரணம் குறித்து பிக்பாஸ் கேட்ட பொழுது.. அன்ஷிதாவிற்கு வெளியே நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆகவே அவரை நாமினேட் செய்கிறேன் என்று அர்னவ் கூற.. "நீங்கள் அன்ஷிதாவை தேர்ந்தெடுத்தது சரி, ஆனால் அவருடைய நலம் விரிம்பியாக இல்லாமல், பிக் பாஸ் வீட்டு போட்டியாளராக இருந்து அவரை நாமினேட் செய்ய காரணத்தை கூறுங்கள் என்று நோஸ் கட் செய்துள்ளார் பிக் பாஸ்.

Video Top Stories