மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் மிகவும் சிறப்பாக கடந்த இரண்டு வாரங்களை கடந்து நடந்து வருகின்றது.
இதுவரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை, இந்த எட்டாவது சீசனில் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளிலேயே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாஞ்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இணைந்துள்ள நிலையில், இந்த இரண்டு வாரங்களில் முதல் வாரத்தில் சினிமா விமர்சிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் வெளியேறினார்.
இரண்டாவது வாரத்தில் நடிகர் அர்னவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். தொடர்ச்சியாக பல சுவாரசியமான நிகழ்வுகளோடு இந்த நிகழ்ச்சியில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சௌந்தர்யா நஞ்சுண்டனின் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.