ரொமான்ஸில் கலக்கும் ராஜு; 'பன் பட்டர் ஜாம்' படத்தில் இருந்து 'ஏதோ பேசத்தானே' சிங்கிள் பாடல்!
பிக்பாஸ் ராஜு நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ராஜு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
'எதோ பேச தானே' என தொடங்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை நடிகர் சித்தார்த் மற்றும் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். இந்த ராகவ் மிர்தத் இயக்கி உள்ளார்.