"அவரை போல நன்மைகள் செய்ய ஆசை".. கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய GP முத்து - வெளியான வீடியோ!
GP Muthu in Vijayakanth Memorial : பிக் பாஸ் புகழ் நடிகர் ஜி.பி. முத்து அவர்கள், இன்று சென்னையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
தனது வீடியோக்களில் மக்களை வசைபாடுவதன் மூலம் புகழ்பெற்று, அதன் பிறகு படங்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய நடிகர் தான் ஜி.பி முத்து. இவருடைய வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய அந்த வெகுளித்தனம் தான் பலரை ஈர்த்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மண்ணை விட்டு மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய நினைவிடத்திற்கு நேரில் சென்று, மாலை அணிவித்து தனது மரியாதையை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தியுள்ளார் ஜி.பி முத்து. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐயா கேப்டன் அவர்களுடைய வீட்டிற்கு தற்பொழுது என்னால் செல்ல முடியவில்லை என்று கூறினார். மேலும் அவர் செய்த நல்ல பல பணிகளை நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்றும், நானும் என்னால் முடிந்த உதவிகளை தற்பொழுது செய்து வருகிறேன் என்றும், நிச்சயம் அவரைப்போல நன்மைகளை செய்ய எனக்கும் ஆசையாக இருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.