உண்மை எது பொய் எதுன்னு புரியல; திக்.. திக்.. காட்சிகளுடன் வெளியானது பாவனாவின் 'டோர்' ட்ரைலர்!
நடிகை பாவனா, கதையின் நாயகியாக நடித்துள்ள 'டோர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இயக்குனர் ஜெய் தேவ் இயக்கத்தில், நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் டோர். ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை நவீன் ராஜன் தயார்த்துள்ளார்.
ஒரு சராசரி மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்றும், ஆனால் சமீப காலமாக 50 - 60 வயதிலேயே இறந்து விடுகிறான். அப்படிப்பட்ட இறந்த மனிதனின் ஆன்மா நம்முடன் தான் இருக்கும் என, இந்த படத்தின் டிரைலரில் வரும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. பாவனாவை தவிர இந்த படத்தில் சிவரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ் பாண்டி ரவி, சங்கீதா, கணேஷ் வெங்கடாசலம், ஜெயபிரகாஷ், பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வருண் உன்னி இசையமைத்துள்ள நிலையில், அத்துல் விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார். கௌதம் ஜி ஒளிப்பதிவு செய்ய இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.