அப்பா - மகன் இடையேயான எமோஷ்னல் ரோலர் கோஸ்டர் பீலிங் 'கருமேகங்கள் கலைகின்றன' ட்ரைலர் வெளியானது!

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ட்ரைலரை நீதியரசர் சந்துரு வெளியிட்டுள்ளார்.
 

First Published Aug 14, 2023, 5:31 PM IST | Last Updated Aug 14, 2023, 5:31 PM IST

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்தின் டிரைலர் இன்று (ஆக-14) வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் இந்தப்படத்தின் டிரைலரை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தந்தை பாரதி ராஜா - மகன் கெளதம் மேனன் இடையே உள்ள பாசம், கோவம், வெறுப்பு... போன எமோஷனை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படம்  செப்-1ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Video Top Stories