Asianet News TamilAsianet News Tamil

காதல்... மோதல்... கொலை! பரத் - வாணி போஜன் நடித்துள்ள பக் பக் 'லவ்' ட்ரைலர் வெளியானது!

நடிகர் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ள 'லவ்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Jul 13, 2023, 10:28 PM IST | Last Updated Jul 13, 2023, 10:28 PM IST

ஏற்கனவே நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்த 'மிரள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் 'லவ்' என்கிற படத்தில் வாணி போஜனும், பரத்தும் இணைந்து நடித்துள்ளனர்.

ஆர் பி பாலா என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில், பரத் - வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, சந்தேகம், கோபத்தின் வெளிப்பாடு, போன்றவற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையில் கோபத்தின் உச்சத்தில் வாணி போஜனை பரத் கொன்றுவிட, அதை மறைக்க நண்பர்கள் உதவியுடன் பரத் என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான கதைகளத்தில் கூறியுள்ளார் இயக்குனர்.

 இப்படத்தை ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இணைந்து தயாரித்துள்ளனர். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் Ronnie Raphael. அஜய் மனோஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இது ஒரு காதல் கதையாக இருந்தாலும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் உருவாக்கி உள்ளது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ், போன்ற பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'லவ்' திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories