யூ டியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த... 'பகாசூரன்' சிவ சிவாயம் பாடல்! வீடியோ..

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில், வெளியான 'பகாசூரன்' படத்தில் இடம்பெற்ற சிவ சிவாயம் பாடல் youtube டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது, ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக மாறியுள்ளது.
 

First Published Feb 20, 2023, 7:10 PM IST | Last Updated Feb 21, 2023, 12:47 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளை எடுத்துக் கூறும், சர்ச்சையான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் மோகன் ஜி. 'ருத்ர தாண்டவம்' படத்தை தொடர்ந்து, இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் முக்கிய வேடத்தில், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்ற பலர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும்... சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனையை தைரியமாக மோகன் ஜி கூறியுள்ளதற்கு பலர் தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'சிவ சிவாயம்' வீடியோ பாடல் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியான நிலையில், தொடர்ந்து youtube-பில் அதிக அளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்டு,  டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. தெய்வீக உணர்வுடன் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories