'பேட் கேர்ள்' படத்தில் இருந்து வெளியான பிளீஸ் என்ன அப்படி பார்க்காத லிரிக்கல் பாடல்!
பிராமணர் சமூகத்தை, இழிவு படுத்தும் விதமாக 'பேட் கேர்ள்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து முதல் லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றி மாறனின், துணை இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டீசர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்தும் விதமாக, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் வர்ஷா பரத், பெண்களை இந்த சமூகம் அவர்களுக்கு பிடித்தது போல் வாழ விடவில்லை. பெண்களின் சுதந்திரத்தை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் இடமேற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான பிளேஸ் என்ன அப்படி பார்க்காதே என்கிற பாடல் வெளியாகி உள்ளது.