Watch: ஸ்கூல் டைம் அட்ராசிட்டியை நியாகப்படுத்தும்.. 'பாபா பிளாக் ஷீப்' படத்தின் ட்ரைலர்!

ஸ்கூல் டேஸ் நியாபகங்களை நினைவு படுத்தும் வகையில், 'பாபா பிளாக் ஷீப்' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், அவர்களுடைய மறக்க முடியாத நினைவுகள் என்றால் அது பள்ளி - கல்லூரி காலங்கள் தான். அந்த வகையில் 'பாபா பிளாக் ஷீப்' படத்தின் மூலம், மீண்டும் பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் இயக்குனர் ராஜ்மோகன் ஆறுமுகம்.

ஏற்கனவே பள்ளி காலங்களை நினைவூட்டும் வகையில், பட்டாளம், 96, உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி இருந்தாலும், அதைவிட சற்று கூடுதலான கலகலப்புடன் இந்த படத்தை இயக்கி உள்ளார். டீன் ஏஜ் பள்ளி மாணவர்களிடம் இருக்கும் கேங் பிரச்சனை, லாஸ்ட் பெஞ்ச் சண்டை, காதல் போன்ற பல்வேறு விஷயங்களை நினைவூட்டும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர், 'விருமாண்டி' பட நாயகி அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆர் ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள நிலையில், சுதர்ஷன் சீனிவாசன் ஒளிபதிவு செய்துள்ளார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பில் உருவாக்கியுள்ள இப்படம், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video