
‘ஸ்வீட் ஹார்ட்’ ரியோவுக்காக யுவன் மஜாவாக கம்போஸ் பண்ணிய கிஸா பாட்டு!
ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஆஸம் கிஸா பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது மட்டுமின்றி அதை தயாரித்தும் உள்ளார். இப்படம் வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஆஸம் கிஸா சாங் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த பாடலை யுவன் மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர்.
கெளுத்தி மற்றும் கானா பிரான்சிஸ் ஆகியோர் இப்பாடல் வரிகளை எழுதி உள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி சுப்ரமணியம் மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழ் அரசன் இப்படத்திற்கு படத்தொகுப்பாளரகா பணியாற்றி இருக்கிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆஸம் கிஸா பாடலை கேட்ட ரசிகர்கள் இது லவ் டுடே படத்தில் இடம்பெறும் பச்சை இலை பாடலை போல் இருப்பதாக கூறி வருகின்றனர். ரியோ நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜோ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது ஸ்வீட் ஹார்ட் திரைப்படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.