இங்க ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு! அதர்வா நடித்துள்ள 'DNA' டீசர் வெளியானது!
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள, 'DNA' திரைப்படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா - நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அதர்வா, தற்போது 'டிஎன்ஏ' என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் 'சித்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த, நடிகை நிமிஷம் சஜகன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியன் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நொடிக்கு நொடி ட்விஸ்ட் மற்றும் திரில் காட்சிகளுடன் இந்த படத்தை நெல்சன் இயக்கி உள்ளது டீசர் மூலமே தெரிகிறது.