Asianet News TamilAsianet News Tamil

இந்த மாதிரி கேவலமான வேலைய பண்ணாதீங்க... தன் பெயரில் நடந்த நூதன மோசடியால் டென்ஷன் ஆன அசுரன் பட நடிகை

நடிகை அம்மு அபிராமி, தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

First Published Nov 24, 2022, 10:59 AM IST | Last Updated Nov 24, 2022, 10:59 AM IST

விஜய்யின் பைரவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன் போன்ற படங்களில் நடித்த இவர், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். 

இதையடுத்து பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அம்மு அபிராமியை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அம்மு அபிராமி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அம்மு அபிராமி. அதன்படி அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தான் சுற்றுலா சென்ற வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரது யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பி அடித்து போலியாக ஒரு சேனலை தொடங்கி உள்ளார்.

அது அம்மு அபிராமியின் சேனல் என நினைத்து ஏராளமானோர் அந்த சேனலை பின் தொடர்ந்தும் வந்துள்ளனர். அப்படி பின் தொடர்ந்த ரசிகர் ஒருவரிடம், தங்களுக்கு ஐபோன் ஒன்றி பரிசு கிடைத்துள்ளதாகவும், அதனை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு டெலிவரி சார்ஜாக ரூ.5000 நீங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நினைத்து அந்த ரசிகரும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் தான் அவர் மோசடியில் சிக்கி உள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் அம்மு அபிராமியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார் அந்த ரசிகர். இதைப்பார்த்து ஷாக் ஆன அம்மு அபிராமி, இந்த நூதன மோசடியை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சில ஸ்கிரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, தயவு செய்து இதுபோல் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என தனது ரசிகர்களை அலர்ட் செய்துள்ளார். நடிகை பெயரில் நடந்த இந்த நூதன மோசடி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories