Asianet News TamilAsianet News Tamil

ஸ்கூல் பாய்யாக கலக்கும் அசோக் செல்வன்! வெளியானது சபா நாயகன் டிசர்!

இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சபாநாயகன். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

First Published Apr 26, 2023, 1:02 AM IST | Last Updated Apr 26, 2023, 1:02 AM IST

நடிகர் அசோக் செல்வன், இதற்கு முன்னர் ஏற்று நடத்திடாத மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் திரைப்படம் 'சபா நாயகன்'. இப்படத்தில் முதல்முறையாக ஸ்கூல் பாய் கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ்,  கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுதிரி, ஆகிய மூன்று பேர் நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண்குமார், ஜெயசீலன், சிவராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீஸரே இப்படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ், ஆகிய மூன்று பேர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் ஷிவா படத்தொகுப்பு செய்துள்ளார்.  இந்த படத்தை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மேகாவானன் இசைவாணன் ஆகியோர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories