திக்.. திக்.. உள்ள போனவன் எவனும் உசுரோட திரும்புனது இல்ல..! நொடிக்கு நொடி மிரட்டும் ஆர்யாவின் 'வில்லேஜ்' ட்ரைல

நடிகர் ஆர்யா நடிப்பில், ஓடிடி -யில் வெளியாக உள்ள வில்லேஜ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனர் மிலண்ட் ராவ் இயக்கத்தில், ஆர்யா வித்யாசமான திகில் திரைப்படத்தில் நடித்துள்ள 'தி வில்லேஜ்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, திவ்யா பிள்ளை நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், முத்துக்குமார், தலைவாசல் விஜய், ஜான் கோகென், ஜார்ஜ் மரியான், ஆழியா, கலைராணி, ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

'கட்டில்' என்கிற கிராமத்தில் உள்ள காட்டில் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியை தொலைத்து விட்டு அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதை ஆர்யா, பல தடைகளை தாண்டி கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்களம். மேலும் இந்த காட்டில் உள்ள அமானுஷ்யம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டதா, அல்லது தீய சக்தியா, வேற்றுகிரக கிரக வாசியா என்கிற பரபரப்போடு இப்படத்தில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் இப்படம் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video