Asianet News TamilAsianet News Tamil

அல்லாவும் அய்யனாரும் ஒன்னு.! வெளியானது ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்து ராமலிங்கம்' பட ட்ரைலர்!

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

ஆர்யா கிராமத்து இளைஞராக நடித்துள்ள, 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆர்யா நடித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக் புரொடக்சன் இந்த படத்தை வழங்க,  ஜி ஸ்டுடியோஸ் மற்றும் வெடிக்கரன் பட்டி எஸ் சக்திவேல் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு, பாபா பாஸ்கர், சோபி, சாண்டி, ஜெனி, ஷெரிஃப் மற்றும் சதீஷ் ஆகிய ஆறு பேர் நடனம் அமைத்துள்ளனர். ஆர்யாவுக்கு ஜோடியாக கேரளா ஸ்டோரி மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, தமிழ்,  மதுசூதன ராவ்,அவினாஷ், விஜி, ரேணுகா போன்ற பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முத்தையா வழக்கம் போல் தன்னுடைய பாணியில் கிராமத்து கதையில் களமாடி இருக்கிறார். மேலும் இப்படம் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமை பற்றியும், அதன் உள்ளே இருக்கும் அரசியல் குறித்தும் பேசுகிறது என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. அதே போல் ஆர்யா வழக்கம் போல் ஆக்ஷனில் பொளந்து கட்டியுள்ளார்.

Video Top Stories