Asianet News TamilAsianet News Tamil

கண்ணு முன்னணி என்ன இருக்குனு பார்த்து நடக்கணும்! 'கழுவேத்தி மூர்க்கன்' ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

இந்த வாரம் வெளியாக உள்ள, அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

First Published May 24, 2023, 7:20 PM IST | Last Updated May 24, 2023, 7:20 PM IST

ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’, இந்த படத்தில்  நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அருள்நிதி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர், மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என ஒரு பொழுது போக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தை ‘ராட்சசி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சை கௌதமராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம், மே 26 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories