நொடிக்கு நொடி திரில்லிங்... வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' டீசர் வெளியானது!

தேசிய விருது இயக்குனர், வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள அநீதி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video


தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின், அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. 

தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில், அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை துஷரா விஜயன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எட்வின் சாகே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்துள்ள இந்த திரைப்படம் திரில்லிங் சினிமாட்டிக் பயணமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video