விஜய்யின் எந்த ஒரு படத்திற்கும் இல்லாத சிறப்பு; 'GOAT' சீக்ரெட்டை உடைத்த தயாரிப்பாளர்! - Video

தளபதி விஜய் நடித்துள்ள, 'GOAT' திரைப்படத்தின் ட்ரைலர் லான்ச் சமீபத்தில் நடந்த போது இதில் பேசிய அர்ச்சனா கல்பாத்தி, இதுவரை தளபதி விஜய்யின் எந்த ஒரு படங்களுக்கும் இல்லாத சிறப்பு இந்த படத்திற்கு உள்ளதாக கூறியுள்ளார்.
 

Share this Video

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் 'GOAT'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சுமார் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு என விழா ஒன்றையும் ஏற்பாடு செய்தது AGS நிறுவனம்.

இந்த விழாவில் பேசிய வெங்கட் பிரபு படம் குறித்தும், இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதே போல்,இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசும்போது, இதுவரை வெளியான தளபதி படங்களிலேயே அதிகமான ஃபாரின் லொகேஷனில் ஷூட் செய்த திரைப்படம் 'GOAT' என கூறியுள்ளார். அதே போல் வெங்கட் பிரபுவின் இது அரசியல் படம் இல்லை. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என கூறியுள்ளார்.

Related Video